வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜம்மு,-ஜம்மு - காஷ்மீரின் திரிகுடா மலையில் உள்ள வைஷ்ணவி தேவி குகைக் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்புக்காக, 700 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
![]()
|
ஜம்மு - காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள திரிகுடா மலையில், வைஷ்ணவி தேவி குகைக் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு, 2022ல் மட்டும், 91.25 லட்சம் பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.
![]()
|
இது குறித்து வைஷ்ணவி தேவி கோவில் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி அன்ஷுல் கர்க் கூறியதாவது:
கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், கூட்டத்தை கட்டுப்படுத்தவும், தரிசனத்துக்கு பக்தர்கள் பதிவு செய்வதில் தடையற்ற நடைமுறையை உறுதி செய்யவும், 'யாத்ரா' அட்டையை அறிமுகப்படுத்தி உள்ளோம்.
இந்த அட்டை, 'ரேடியோ' அதிர்வலை தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.
அதே போல, பக்தர்களின் பாதுகாப்பை கண்காணிப்பதற்காக, 700 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement