வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:...
எஸ்.ராமசுப்ரமணியன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
![]()
|
தி.மு.க., சார்பில், மொழிப்போர் தியாகிகள்வீரவணக்க நாள் பொதுக் கூட்டம், திருவள்ளூரில், 'கல்லெறி' புகழ், அமைச்சர் நாசர் தலைமையில் நடந்தது. இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'தமிழகத்தில் ஹிந்தி திணிப்பை எதிர்ப்பதில், தி.மு.க., உறுதியாக உள்ளது' என்று கூறியுள்ளார்.
உண்மையில் ஹிந்தி மொழியானது, முதல்வரின் குடும்பத்தினர் நடத்தும் பள்ளி உட்பட, கழக கல்வித் தந்தையர் நடத்தும் பள்ளிகளில் தான் போதிக்கப்படுகிறதே தவிர, அரசு பள்ளிகளிலோ, சென்னை மாநகராட்சி நடத்தும் பள்ளிகளிலோ போதிக்கப்படுவதில்லை.
ஆனாலும், ஹிந்திக்கு எதிரான கழகத் தலைவர்களின் பசப்பு வார்த்தைகளை நம்பி, போராட்டம் நடத்திய, ௧௨ பேர், தீக்குளித்து உயிரை மாய்த்துள்ளனர். அந்த, ௧௨ பேரில் ஒருவர், சிவகங்கை கல்லுாரி மாணவர் ராஜேந்திரன்; மற்றொருவர், பள்ளி ஆசிரியர். இருவருக்கும் ஹிந்தி மொழியால் பாதிப்பு இருந்திருக்கலாம்; ஆனால், மீதி உயிரிழந்த, ௧௦ பேரும் விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள்.
ஹிந்திக்கு எதிராக போராடி உயிர் நீத்தவர்களின் நினைவாக, ஆண்டுதோறும் ஜனவரி ௨௫ல், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை, தி.மு.க., அனுசரித்து வருகிறது. அத்துடன், ௧௨ பேரில் ஒரு சிலர் பெயர்களை, அரசு கட்டடங்களுக்கும், பாலங்களுக்கும் சூட்டி பெருமை அடைந்துள்ளது, தி.மு.க., அரசு.
'நீட்' தேர்வுக்கு அஞ்சி தற்கொலை செய்த, அனிதா குடும்பத்திற்கு லட்சக்கணக்கில் நிதியுதவி அளித்தது போல, ஹிந்திக்கு எதிராக போராடி உயிர் நீத்தவர்களின் குடும்பங்களுக்கு, காலணா கூட நிதியுதவி வழங்கப்படவில்லை; இத்தனைக்கும் அவர்கள் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்!
அத்துடன், அந்த குடும்பங்களைச் சேர்ந்த வாரிசுகள் யாருக்கும், கட்சியிலோ, அரசிலோ எந்தப் பதவியும் வழங்கப்படவும் இல்லை. இறந்தவர்களுக்காக ஆண்டுக்கு ஒரு நாள், 'வீர வணக்கம்! வீர வணக்கம்!' என்று மேடையேறி முழங்கி, பின் அமைதியாகி விடுவர், கழக ஆட்சியாளர்கள். இதனால், உயிரிழந்தவர்களின் ஆத்மாவோ, குடும்பமோ திருப்தி அடைந்து விடுமா?
சென்னை மேயர் பதவி, ஜாதி சுழற்சி முறையில் பிராமணர்களுக்கு வருகிறது என்று தெரிந்ததும், கழக உடன்பிறப்புகளில் ஒருவராக இருந்து, இயற்கையாக உயிரை விட்ட ஜெயராமனின் மனைவி காமாட்சியை, அவசர அவசரமாக மேயராக நியமிக்க முடிந்த கழகத்திற்கு, மொழிப் போர் தியாகிகளின் குடும்பத்தினரை, ஏதாவது ஒரு பதவியில் அமர்த்தி அழகு பார்க்க வேண்டுமென்று தோன்றவே இல்லை.
![]()
|
அன்பில் தர்மலிங்கம், பொன்முடி, துரைமுருகன், மறைந்த தங்க பாண்டியன் உட்பட பலரின் வாரிசுகள், தி.மு.க.,வில் பதவி பெற்றுள்ளனர். அவர்கள், ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடத்தி இருக்கின்றனரா... என்ன தியாகம் செய்திருக்கின்றனர் என்று கேள்வி எழுப்பினால், கழகத்தினர் யாராலும் பதில் சொல்ல முடியாது.
இப்படி, 'புருடா' விட்டும், புளுகியும், தகிடுதத்தம் செய்தும், இன்னும் எத்தனை காலம் ஏமாற்றுவரோ, தி.மு.க.,வினர்!
Advertisement