'ஈ.வெ.ரா.,வுக்கு முன்பே சமூக நீதியை காத்தவர்கள் நீதிக் கட்சி தலைவர்கள்!'

Updated : ஜன 28, 2023 | Added : ஜன 28, 2023 | கருத்துகள் (8) | |
Advertisement
சென்னை--சென்னை பல்கலையின் சட்ட படிப்பு துறை சார்பில், 'ஜனநாயகம் மற்றும் சமூக நீதியில் ஒருமித்த கருத்தும் சர்ச்சைகளும்' என்ற தலைப்பில், இரண்டு நாள் கருத்தரங்கு நேற்று நடந்தது. துணை வேந்தர் கவுரி தலைமை வகித்தார். இட ஒதுக்கீடுஅமைச்சர் தியாகராஜன் பேசியதாவது:சமூக நீதியை பாதுகாக்கும் திட்டங்கள் மற்றும் அதில் ஈ.வெ.ராமசாமியின் திராவிடர் கழகம் மற்றும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை--சென்னை பல்கலையின் சட்ட படிப்பு துறை சார்பில், 'ஜனநாயகம் மற்றும் சமூக நீதியில் ஒருமித்த கருத்தும் சர்ச்சைகளும்' என்ற தலைப்பில், இரண்டு நாள் கருத்தரங்கு நேற்று நடந்தது. துணை வேந்தர் கவுரி தலைமை வகித்தார்.



latest tamil news


இட ஒதுக்கீடு



அமைச்சர் தியாகராஜன் பேசியதாவது:

சமூக நீதியை பாதுகாக்கும் திட்டங்கள் மற்றும் அதில் ஈ.வெ.ராமசாமியின் திராவிடர் கழகம் மற்றும் சுயமரியாதை இயக்கத்தின் பங்களிப்பு குறித்து, சில முக்கியமான விளக்கங்கள் அளிக்க விரும்புகிறேன்.

தமிழகத்தில், 1921ல் நீதிக் கட்சி ஆட்சி அமைத்தது. அப்போது, ஈ.வெ.ரா., நீதிக் கட்சியில் இல்லை. காங்கிரஸ் கட்சியில் இருந்தார்.

பெண்களுக்கு கட்டாய ஓட்டுரிமை, கட்டாய தொடக்க கல்வி உரிமை, ஜாதி ரீதியான இட ஒதுக்கீடு ஆகிய சமூக நீதியை காக்கும் முக்கிய முடிவுகள், நீதிக் கட்சி ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டவை.

இந்த முடிவுகள், ஈ.வெ.ராமசாமி காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறும் முன், நீதிக் கட்சி ஆட்சியில் நடந்தவை. இவற்றை யாரும் மறந்து விடக் கூடாது.

எனவே, அப்போதைய நீதிக் கட்சி தலைவர்கள், சுயமரியாதை இயக்கத்துக்கு முன்பே சமூக நீதியை காத்தவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தமிழில் அர்ச்சனை

இந்திய அரசியலமைப்பை நாம் செயல்படுத்தும்போது, மக்களுக்கு ஓட்டுரிமை வாயிலாக பொறுப்புடைமையும், உரிமையும் இருக்கிறது.

ஒவ்வொருவரையும் சமமாக நடத்த வேண்டும் என வடிவமைக்கப்பட்டதே, இந்திய அரசியலமைப்பு. அது தான் சமூக நீதி.

அமெரிக்காவில் ஒரு காலத்தில் பிராட்டஸ்டன்ட், கத்தோலிக்கர், ஆப்ரிக்கன், அமெரிக்கன் என, பாகுபாடு இருந்தது. தமிழகத்தை எடுத்துக் கொண்டால், ஜாதி ரீதியாக ஒவ்வொருவரும் பிரிக்கப்பட்டனர்.

நீதிக் கட்சி ஆட்சிக்கு பின், காங்கிரஸ் மற்றும் சுதந்திரா கட்சி கூட்டணி ஆட்சிக்கு வந்த பின், அவை திராவிட தத்துவங்களையே பின்பற்றின. அதைத் தான், நாடு முழுதும் காங்கிரஸ் தத்துவமாக்கினர்.


latest tamil news


நீதிக் கட்சி ஆட்சியிலும், ராஜாஜி மற்றும் பக்தவத்சலம் ஆகியோர் ஆட்சியிலும், கோவில்கள் அதிக அளவில் நாட்டுடைமை ஆகின. தமிழில் அர்ச்சனை செய்வது ஊக்கப்படுத்தப்பட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

மின் தடை: அமைச்சர் ‛ஷாக்'

அமைச்சர் பேசும்போது, அரங்கில் திடீரென மின் தடை ஏற்பட்டது. அதனால், 'மைக்' வேலை செய்யவில்லை. அரங்கின் விளக்குகளும் அணைந்து, அரங்கம் கும்மிருட்டாக மாறியது. அதனால், அமைச்சர் தியாகராஜன் தன் உரையை தொடராமல் மைக் முன், சில நிமிடங்கள் அமைதியாக நின்றார்.அப்போது, கூட்டத்தில் இருந்த மாணவர்கள், பேராசிரியர்கள் தங்களின் மொபைல் போனில் உள்ள 'டார்ச்' பயன்படுத்தி, வெளிச்சம் ஏற்படுத்தினர்.இதையடுத்து, இருக்கைக்கு சென்று அமர்ந்த அமைச்சர், பின், சில நிமிடங்களில் மின் வினியோகம் வந்ததும், மீண்டும் பேச்சை தொடர்ந்தார்.அப்போது, அவர் பேசியதாவது:தமிழகத்தை பொறுத்தவரை இதுபோன்ற மின் வெட்டு பிரச்னை கிடையாது. டில்லி ஜே.என்.யு., பல்கலையில் மாணவர் நிகழ்ச்சிக்காக மின் தடை ஏற்படுத்தியது போன்று இங்கு இருக்காது.இந்த மின் தடையில் வேறு சதி இருக்காது. ஆனாலும், சமூக நீதி மற்றும் ஜனநாயகம் குறித்து பேசும்போது, மின் தடை ஏற்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

Dharmavaan - Chennai,இந்தியா
28-ஜன-202308:16:17 IST Report Abuse
Dharmavaan மின் தடை கடவுள் செயல். சமூக அநீதியை அவர் தடுக்கிறார்
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
28-ஜன-202308:16:14 IST Report Abuse
GMM 1921 ல் நீதி கட்சி ஆட்சி? அப்போது வாக்களிக்க தகுதி நிர்ணயம். (நிலம், சொத்து இருக்க வேண்டும். கல்வி, வருமான வரி போன்ற வரிகள் செலுத்தி இருக்க வேண்டும். பெண்களுக்கு இவை இருந்தாலும் ஓட்டளிக்க தகுதி.). சமூக நீதி இல்லாத போது தான் நீதி கட்சி வெல்ல முடிந்தது.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
28-ஜன-202307:50:32 IST Report Abuse
duruvasar ஐஸ்டிஸ் கட்சி என்பது தெலுங்கு அரசர்களாலும் ஜமீன்தார்களாலும் பாளயகாரர்களாலும் தங்களுடைய இருப்பை பாதுகாத்துக்கொள்ள சமூகநீதி என்பதை முன்னிருத்தி தொடங்கப்பட்ட கட்சி என்ற உண்மையை இந்த இரட்டை பி ஹெச்டி அறிஞருக்கு சொல்ல ஏன் தைரியம் இல்லை. தங்கள் சொத்துகளை பாதுகாத்து கொள்ளவும் அதை யாரும் கேள்வி கேட்காமால் இருப்பதற்காகவும் மக்களை திசை திருப்ப எடுக்கப்பட்ட சொல்தான் சமூகநீதி, சமத்துவம் என்பதெல்லாம். பின் ஈரோடு ராமசாமி நாயக்கன் சுயமரியாதை என்ற வார்த்தையை சேர்த்து தெலுங்கர்களை பாதுகாத்துக்கொள்ள திராவிடம் என்ற வார்த்தையையும் உருவாக்கினார். இது ஒருபுறம் இருக்க ஜஸ்டிஸ் கட்சி ஏன் தமிழர்களை கோவணம் கட்ட வைக்கவில்லை. ராமசாமி நாயக்கன் தான் செய்தார் என கூறிக்கொள்கிறார்களே. இந்த லட்சணத்தில் தான் தெலுங்கர்கள் தமிழர்களுக்கு சமூகநீதி செய்தார்களா தமிழகத்தில் இனிமேல் மாற்றுபாதையில் செல்லவும் என்று போர்டுகளில் சமூகநீதி என்று மாற்றி எழுதலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X