சென்னை--முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, மே மாதம் வரை, அனைத்து சனிக்கிழமையும் வகுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக கல்லுாரி கல்வி இயக்குனரகம் சார்பில், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
கலை, அறிவியல் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு இளநிலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை தாமதமாக நடத்தப்பட்டது. அதனால், அவர்களுக்கு பாடங்கள் நடத்துவதில், கூடுதல் வகுப்பு நேரம் தேவைப்படுகிறது.
எனவே, வரும் மே மாதம் வரை அனைத்து சனிக்கிழமைகளிலும், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லுாரிகளில் வகுப்பு நடத்த வேண்டும்.
இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.