வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
புதுடில்லி: டில்லி பல்கலையில் பிபிசி ஆவணப் படம் திரையிட முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது இதையடுத்து 24 மாணவர்களை போலீசார் கைது செய்தனர் .
![]()
|
குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரம் குறித்து, பி.பி.சி., தொலைக்காட்சி, ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் கருத்துகள் சர்ச்சைகளை ஏற்படுத்துவதால், அந்த படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட, மத்திய அரசு தடை விதித்துள்ளது.
ஆனாலும், பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆவணப்படம், பல இடங்களில் திரையிடப்படுகிறது.
இந்நிலையில் டில்லி பல்கலையில் சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப் படம் திரையிட முயற்சி செய்ததால் 24 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். தடையை மீறி படத்தை திரையிட முயன்ற ஜேஎன்யு பல்கலை மற்றும் ஜாமியா பல்கலைமாணவர்களும் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
மேலும், பிரச்னை ஏற்படாத வகையில் டில்லி பல்கலை வளாகத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
![]()
|
இந்நிலையில், சென்னை பல்கலையில், குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தை திரையிட, மாணவர்கள் திட்டமிட்டனர்.
அந்த படத்தை பல்கலை வளாகத்தில் திரையிட, துணைவேந்தர் கவுரி தடை விதித்தார். இதையடுத்து நேற்று, அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
ஆனால், பல்கலையின் தடையை மீறி, இந்திய மாணவர் சங்க மாநில செயலர் நிருபன் தலைமையிலான மாணவர்கள், பல்கலை வளாகத்தில் லேப்டாப், மொபைல் போன் ஆகியவை வழியாக, ஆவணப்படத்தை மாணவர்கள் பார்க்கும்படி ஏற்பாடு செய்தனர்.
இதனால், பரபரப்பு ஏற்பட்டது.
Advertisement