வடலுார்: வடலுார் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
வடலுார் ஓ.பி.ஆர். கல்வி நிறுவனங்களில் தாளாளர் டாக்டர் செல்வராஜ் தலைமை தாங்கி, தேசியக் கொடியை ஏற்றினார். பின், தேசிய மாணவர் படை, நாட்டு நலப் பணிகள் திட்டம் மற்றும் செஞ்சிலுவை சங்க மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமானுஜம் வாழ்த்துரை வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் பூர்ணிமா தேவி வரவேற்றார். பழனிவேல், நிகழ்ச்சிகளை தொகுத்து வாங்கினார். தமிழாசிரியர் விஜயபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆங்கில வழி கல்வி தலைமை ஆசிரியர் உலகநாதன் நன்றி கூறினார்.