Todays Crime Round Up: Kidnapping of a Love Married Woman: Inspector in Waiting | இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்: காதல் திருமணம் செய்த பெண் கடத்தல்: காத்திருப்பில் இன்ஸ்பெக்டர்| Dinamalar

இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்': காதல் திருமணம் செய்த பெண் கடத்தல்: காத்திருப்பில் இன்ஸ்பெக்டர்

Updated : ஜன 28, 2023 | Added : ஜன 28, 2023 | |
காதல் திருமணம் செய்த பெண் கடத்தல்: 'காத்திருப்பில்' இன்ஸ்பெக்டர்: இன்றைய ‛கிரைம் ரவுண்ட்' அப் தமிழக நிகழ்வுகள்காதல் திருமணம் செய்த பெண் கடத்தல்: 'காத்திருப்பில்' இன்ஸ்பெக்டர் தென்காசி- -தென்காசியில் காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை கணவரை தாக்கி பெற்றோர் கடத்தி சென்றனர். புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத குற்றாலம் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்
Todays Crime Round Up: Kidnapping of a Love Married Woman: Inspector in Waiting  இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்': காதல் திருமணம் செய்த பெண் கடத்தல்: காத்திருப்பில் இன்ஸ்பெக்டர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

காதல் திருமணம் செய்த பெண் கடத்தல்: 'காத்திருப்பில்' இன்ஸ்பெக்டர்: இன்றைய ‛கிரைம் ரவுண்ட்' அப்


தமிழக நிகழ்வுகள்




காதல் திருமணம் செய்த பெண் கடத்தல்: 'காத்திருப்பில்' இன்ஸ்பெக்டர்



தென்காசி- -தென்காசியில் காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை கணவரை தாக்கி பெற்றோர் கடத்தி சென்றனர். புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத குற்றாலம் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.


latest tamil news


தென்காசி அருகே செங்கோட்டையில் வசிப்பவர் நவீன் பட்டேல். குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் பல ஆண்டுகளாக செங்கோட்டையில் மரக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் கிருத்திகா பட்டேல் 23. கிருத்திகாவும் தென்காசி குத்துக்கல்வலசையை சேர்ந்த வினித் 24 என்பவரும் பள்ளியில் படிக்கும் போதிருந்து காதலித்துள்ளனர். வினித் மென்பொருள் பொறியாளராக சென்னையில் பணியாற்றுகிறார்.

டிசம்பர் 27ல் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கன்னியாகுமரியில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் தென்காசியில் வினித்தின் பெற்றோர் வீட்டில் வசித்தனர். கிருத்திகாவை பெற்றோரிடம் ஒப்படைக்கும்படி வினித்துக்கு மிரட்டல்கள் வந்தன. எனவே ஜனவரி 4ம் தேதி இருவரும் குற்றாலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேரில் சென்று புகார் செய்தனர்.

கிருத்திகாவின் தந்தை நவீன்படேல் தரப்பை அழைத்து இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் பேசினார். இருவரும் மேஜர் என்பதால் அவர்களை துன்புறுத்தக் கூடாது என இரு தரப்பிலும் கடிதம் எழுதி வாங்கி அனுப்பினார்.

ஜன.14 ல் கிருத்திகாவை மருத்துவமனைக்கு காரில் அழைத்து செல்லும்போது டூவீலர்களில் வந்து கார் மீது மோதிய ஒரு கும்பல் அவர்களை தாக்க முயற்சித்தனர். கிருத்திகாவும் வினித்தும் அங்குள்ள மரக்கடைக்குள் புகுந்து தப்பி ஓட முயற்சித்தனர். அங்கு சென்ற நவீன் படேல் தரப்பினர் இருவரையும் கடுமையாக தாக்கினர்.

தனிப்பிரிவில் புகார்

எனவே இருவரும் தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பினர். மீண்டும் அலெக்ஸ் இரு தரப்பையும் அழைத்து விசாரித்தார். ஏன் முதல்வரின் தனிப்பிரிவிற்கு புகார் செய்தீர்கள் என வினித்திடம் கடுமையாக நடந்துள்ளார்.

ஜன.,25 ல் அவர்களை குற்றாலம் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு அழைத்துள்ளார். அங்கிருந்து வெளியே வந்த போது ஒரு கும்பல் கிருத்திகாவை காரில் கடத்திச் சென்றது. வினித்தும் அவரது தந்தையும் தாக்கப்பட்டனர். இதுகுறித்து புகார் அளித்தும் குற்றாலம் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. வினித் தரப்பில் டி.ஐ.ஜி.யிடம் புகார் அளிக்கப்பட்டது.

விசாரணை நடத்திய டி.ஐ.ஜி., பிரவேஷ்குமார், அலெக்சை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

நவீன் படேல், அவரது மனைவி, கார் டிரைவர், மற்றும் கடத்தலில் ஈடுபட்டவர்கள் உட்பட ஏழு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். யாரும் கைது செய்யப்படவில்லை.


சென்னை பல்கலையில் தடையை மீறி ஆவணப்படம்



சென்னை--சென்னை பல்கலை தடையை மீறி, குஜராத் கலவரம் குறித்த ஆவணப் படத்தை, மாணவர்கள் பார்த்தனர்.

குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரம் குறித்து, பி.பி.சி., தொலைக்காட்சி, ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த படத்தின் கருத்துகள் சர்ச்சைகளை ஏற்படுத்துவதால், அந்த படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட, மத்திய அரசு தடை விதித்துள்ளது.

ஆனாலும், பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆவணப்படம், பல இடங்களில் திரையிடப்படுகிறது.

இந்நிலையில், சென்னை பல்கலையில், குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தை திரையிட, மாணவர்கள் திட்டமிட்டனர்.

அந்த படத்தை பல்கலை வளாகத்தில் திரையிட, துணைவேந்தர் கவுரி தடை விதித்தார். இதையடுத்து நேற்று, அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

ஆனால், பல்கலையின் தடையை மீறி, இந்திய மாணவர் சங்க மாநில செயலர் நிருபன் தலைமையிலான மாணவர்கள், பல்கலை வளாகத்தில் லேப்டாப், மொபைல் போன் ஆகியவை வழியாக, ஆவணப்படத்தை மாணவர்கள் பார்க்கும்படி ஏற்பாடு செய்தனர்.

இதனால், பரபரப்பு ஏற்பட்டது.


ரூ 94 லட்சம் தங்கம் பறிமுதல்



சென்னை--காலணி மற்றும் 'லேப்டாப்'பில் மறைத்து கடத்தி வரப்பட்ட, 94.14 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 1.89 கிலோ தங்கத்தை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் இருந்து, 'எமிரேட்ஸ்' விமானம் நேற்று முன்தினம் சென்னை வந்தது. சந்தேகம் அளிக்கும் வகையில், விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்ற பயணி ஒருவரை பிடித்து, சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அவர் காலணிக்குள் மறைத்து, கடத்தி வந்த, 66.82 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 1,340 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல துபாயில் இருந்து, 'பிளை துபாய்' விமானம் வாயிலாக வந்த பயணியரில், இருவரின் உடைமைகளை சோதனை செய்தபோது, 'லேப்டாப் சார்ஜர்' மற்றும் உள்ளாடைக்குள் மறைத்து, தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களிடம் இருந்து, 27.32 லட்சம் ரூபாய் மதிப்பிலான 548 கிராம் தங்கம் கடத்தியது தெரிய வந்தது.

மொத்தம் 94.14 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 1,89 கிராம் தங்கத்தை, சுங்க அதிகாரிகள், பறிமுதல் செய்தனர்.


கடன் மோசடி வழக்கில் வங்கி அதிகாரிக்கு '4 ஆண்டு'


கோவை-கடன் மோசடி வழக்கில், வங்கி மேலாளர் உட்பட மூவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், சாமாளபுரத்திலுள்ள கனரா வங்கியில், பல்லடத்தைச் சேர்ந்த மாரப்பன், 58, புதிய விசைத்தறி இயந்திரம் வாங்க, 2016ல், 9.8 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். கடன் பெறுவதற்காக அவர் வங்கியில் கொடுத்த ஆவணங்களை தணிக்கை செய்தனர்.

அப்போது, திருப்பூர் ராஜலட்சுமி டெக்ஸ் என்ற நிறுவனத்தின், போலி மதிப்பீடு ரசீது மற்றும் போலி ஆவணங்கள் கொடுத்து கடன் பெற்று, அத்தொகைக்கு விசைத்தறி இயந்திரம் வாங்காமல் ஏமாற்றியது தெரியவந்தது.

மோசடிக்கு உடந்தையாக இருந்த வங்கி மேலாளர் ராமச்சந்திரன், 65, ராஜலட்சுமி டெக்ஸ் கந்தசாமி, 57, மாரப்பன், 58, ஆகியோர் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. இவர்கள் மீது, கோவை சி.பி.ஐ., கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடந்து வந்தது.

விசாரித்த நீதிபதி கோவிந்தராஜன், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ராமச்சந்திரனுக்கு, நான்கு ஆண்டு சிறை, 40 ஆயிரம் ரூபாய் அபராதம், கந்தசாமி, மாரப்பன் ஆகியோருக்கு, மூன்றாண்டு சிறை, தலா, 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.


மாணவி பலாத்காரம்: முதியவருக்கு 25 ஆண்டு



தஞ்சாவூர்-ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு, 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அடுத்த ஏர்வாடி கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன், 60; டீக்கடை வைத்திருந்தார்.

இவர், 2021 ஜன., 3ம் தேதி, ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, பாபநாசம் அனைத்து மகளிர் போலீசாரால் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை, தஞ்சாவூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.

நீதிபதி சுந்தர்ராஜன், முதியவர் நாகராஜனுக்கு, 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார்.


100 சவரன் நகையுடன் பறந்த 'குருவி' நடுரோட்டில் தகராறில் ஈடுபட்ட 6 பேர் கைது



மதுரை-ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து மதுரைக்கு, 100 சவரன் நகைகளுடன் வந்தவர், உரியவரிடம் ஒப்படைக்காமல் தப்பினார். நகைக்காக நடுரோட்டில் தகராறில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி, தென்னுாரைச் சேர்ந்தவர் முகமது உவைஸ், 30. இவரது சகோதரர் துபாயில் பணிபுரிகிறார்.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர், முகமது உவைஸ் சகோதரரின் நண்பர். தினேஷிடம், 100 சவரன் நகைகளை கொடுத்து, அதை முகமது உவைசிடம் கொடுக்குமாறு அவரது சகோதரர் கூறி உள்ளார். இது குறித்து தம்பிக்கும் தகவல் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் விமானத்தில் துபாயில் இருந்து மதுரை வந்த தினேஷை, அவருக்கு அறிமுகமான கேரளா, கோழிக்கோடு அகில், 27; சுதீஷ், 35; சிபின், 30; ரெஜிஸ், 38, ஆகியோர் வரவேற்று காரில் அழைத்துச் சென்றனர்.

இதையறிந்த முகமது உவைஸ், உறவினர் முஸ்தாக் ஆகியோர் காரில் பின்தொடர்ந்து, மண்டேலா நகர் ரிங் ரோட்டில் அவர்களை தடுத்தனர். இருதரப்பும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதைப் பயன்படுத்தி அவ்வழியே வந்த பஸ்சில் ஏறி தினேஷ் தலைமறைவானார். ரோட்டில் அடிதடியில் இறங்கிய இரு தரப்பையும் சேர்ந்த ஆறு பேரை, அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் கைது செய்தார்.

போலீசார் கூறியதாவது:

வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் தங்கத்தை கடத்தி வருவோரை, 'குருவி' என்பர். தினேஷ், 100 சவரன் நகைகளுடன் வந்ததாக முகமது உவைஸ் எங்களிடம் தெரிவித்தார்.

ஆனால், சுங்கத்துறை சோதனையை மீறி அவ்வளவு நகைகளை விமான நிலையத்தில் இருந்து வெளியே கொண்டு வர வாய்ப்பில்லை. தினேஷ், தன் கோழிக்கோடு கூட்டாளிகளுடன் விமான நிலையத்தில் இருந்து, 'எஸ்கேப்' ஆக முயன்றபோது, முகமது உவைஸ் தரப்பினர் சுற்றி வளைத்தனர்.

தினேஷை பிடித்தால் தான், உண்மையிலேயே நகைகளை கொண்டு வந்தாரா அல்லது துபாயில் பதுக்கி வைத்துவிட்டு, கொண்டு வந்தது போல நாடகமாடினாரா என தெரியவரும்.

இவ்வாறு போலீசார் கூறினர்.


போலி டாக்டர் கைது



திருவண்ணாமலை-திருவண்ணாமலை அருகே, போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் அடுத்த மாதலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி, 38; அப்பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிறார்.

பிளஸ் 2 மட்டுமே படித்த இவர், மக்களுக்கு பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

இதுகுறித்து, சேத்துப்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் சோபனாவுக்கு தகவல் கிடைத்தது. அவர் புகாரின்படி, மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலாஜியை கைது செய்தனர்.


இந்திய நிகழ்வுகள்



மனைவியுடன் சண்டை: மகனை கொன்றவர் கைது



பதேபூர்,-உத்தர பிரதேசத்தில் மனைவியுடன் சண்டையிட்ட பின், தன் 3 வயது மகனை கோடரியால் வெட்டிக் கொன்றவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

உத்தர பிரதேசத்தின் பதேபூர் மாவட்டத்தில் உள்ள சித்திசாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர கிஷோர் லோதி. நேற்று மது அருந்தி வீட்டுக்கு வந்த இவர், தன் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது ஆந்திரமடைந்த லோதி, அருகில் நின்றிருந்த தன் 3 வயது மகனை கோடரியால் வெட்டிக் கொன்றார். பின், சிறுவனின் உடலை அருகில் உள்ள நிலத்தில் புதைத்தார்.

இது குறித்து இவர் மனைவி கொடுத்த புகாரின்படி விசாரணை நடத்திய போலீசார், லோதியை கைது செய்தனர்.

சிறுவனின் உடலை எடுத்து, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X