கச்சத் தீவு விழாவில் பங்கேற்க 3,500 பேருக்கு இலங்கை அரசு அனுமதி

Updated : ஜன 28, 2023 | Added : ஜன 28, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
ராமேஸ்வரம்--கச்சத்தீவு புனித அந்தோணியார் சர்ச் திருவிழா மார்ச், 3, 4ல் நடக்க உள்ள நிலையில், விழாவுக்கு தமிழக பக்தர்கள், 3,500 பேர் பங்கேற்க இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. பாக் ஜலசந்தி கடலில் ராமேஸ்வரத்தில் இருந்து, 25 கி.மீ., நடுக்கடலில் அமைந்துள்ள கச்சத்தீவில், புனித அந்தோணியார் சர்ச் உள்ளது. இங்கு ஒவ்வோர் ஆண்டும் இலங்கை அரசு அனுமதியுடன், யாழ்ப்பாணம் கத்தோலிக்க மறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ராமேஸ்வரம்--கச்சத்தீவு புனித அந்தோணியார் சர்ச் திருவிழா மார்ச், 3, 4ல் நடக்க உள்ள நிலையில், விழாவுக்கு தமிழக பக்தர்கள், 3,500 பேர் பங்கேற்க இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.



latest tamil news


பாக் ஜலசந்தி கடலில் ராமேஸ்வரத்தில் இருந்து, 25 கி.மீ., நடுக்கடலில் அமைந்துள்ள கச்சத்தீவில், புனித அந்தோணியார் சர்ச் உள்ளது. இங்கு ஒவ்வோர் ஆண்டும் இலங்கை அரசு அனுமதியுடன், யாழ்ப்பாணம் கத்தோலிக்க மறை மாவட்டம் சார்பில், திருவிழா நடத்துவது வழக்கம்.


latest tamil news


இந்த ஆண்டு மார்ச், 3ல் விழா கொடி ஏற்றப்படுகிறது.

அன்றிரவு சிலுவை பாதை திருப்பலி பூஜையும், மறுநாள் திருவிழா திருப்பலி பூஜையும் நடக்கிறது.

இவ்விழாவில், தமிழக பக்தர்கள், 3,500 பேரும், இலங்கை பக்தர்கள், 4,500 பேரும் பங்கேற்க இலங்கை அரசு அனுமதி அளித்து உள்ளது.

மார்ச், 3ல் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் படகில், 3,500 பக்தர்கள் கச்சத்தீவு செல்வர். மறுநாள், திருவிழா முடிந்ததும் ராமேஸ்வரம் திரும்புவர். ராமேஸ்வரம் சர்ச் நிர்வாகிகள் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

duruvasar - indraprastham,இந்தியா
28-ஜன-202314:09:15 IST Report Abuse
duruvasar திராவிட மாடல் அரசின் அழுத்தத்திற்கு காரணம்
Rate this:
28-ஜன-202317:53:12 IST Report Abuse
krishna ARBUDHAMAANA MOOLAI.DRAVIDA MODEL AZHUTHAMAAM.ENNA PETHAL.KACHA THEEVAI ILANGAIKKU THAARAI VAARTHU KODUTHADHE MAFIA CONGRESS KATTUMARAM THIYAMUKKA.ADHU SARI INDHA DRAVIDA MODEL KOTHADIMAI KUMBALUKKU BUDHI IRUNDHAAL ADHISAYAM.ADHISAYAMOO ADHISAYAM....
Rate this:
Cancel
28-ஜன-202308:56:45 IST Report Abuse
பேசும் தமிழன் யாருக்கு ...யார் அனுமதி அளிப்பது ???...இந்திரா காந்தி மற்றும் கருணாநிதி இருவரும் செய்த மாபெரும் தவறு ....தமிழக மீனவர்கள் வாழ்வாதாரமாக விளங்கிய கச்சத்தீவு ....இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டதால் வந்த வினை!!!!
Rate this:
Cancel
B MAADHAVAN - chennai,இந்தியா
28-ஜன-202307:58:12 IST Report Abuse
B MAADHAVAN யாருக்கு யார் அனுமதி தருவது. நம் கட்டுப்பாட்டில் இருந்த இடத்தை அப்போதைய திராவிட அரசு தலைமையில் அவர்களது ஒப்புதலோடு அப்போதைய காங்கிரஸ் அரசால் தாரை வார்த்து தரப்பட்ட இடத்தில் இன்று அவர்களது அனுமதியோடு... வெட்கப் படவேண்டியது திராவிட அரசு அல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X