வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ராமேஸ்வரம்--கச்சத்தீவு புனித அந்தோணியார் சர்ச் திருவிழா மார்ச், 3, 4ல் நடக்க உள்ள நிலையில், விழாவுக்கு தமிழக பக்தர்கள், 3,500 பேர் பங்கேற்க இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.
![]()
|
பாக் ஜலசந்தி கடலில் ராமேஸ்வரத்தில் இருந்து, 25 கி.மீ., நடுக்கடலில் அமைந்துள்ள கச்சத்தீவில், புனித அந்தோணியார் சர்ச் உள்ளது. இங்கு ஒவ்வோர் ஆண்டும் இலங்கை அரசு அனுமதியுடன், யாழ்ப்பாணம் கத்தோலிக்க மறை மாவட்டம் சார்பில், திருவிழா நடத்துவது வழக்கம்.
![]()
|
இந்த ஆண்டு மார்ச், 3ல் விழா கொடி ஏற்றப்படுகிறது.
அன்றிரவு சிலுவை பாதை திருப்பலி பூஜையும், மறுநாள் திருவிழா திருப்பலி பூஜையும் நடக்கிறது.
இவ்விழாவில், தமிழக பக்தர்கள், 3,500 பேரும், இலங்கை பக்தர்கள், 4,500 பேரும் பங்கேற்க இலங்கை அரசு அனுமதி அளித்து உள்ளது.
மார்ச், 3ல் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் படகில், 3,500 பக்தர்கள் கச்சத்தீவு செல்வர். மறுநாள், திருவிழா முடிந்ததும் ராமேஸ்வரம் திரும்புவர். ராமேஸ்வரம் சர்ச் நிர்வாகிகள் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement