சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு 2ம் தாளுக்கான கணினி வழித் தேர்வு, பிப்ரவரி 3 முதல் 14-ம் தேதி வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022-ம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 க்கான கணினி வழித் தேர்வுகள்ஆசிரியர் தேர்வு பிப்ரவரி 3 முதல் 14-ம் தேதி வரை நடைபெறும்.
ஆசிரியர் தகுதித் தேர்வு 2ம் தாளுக்கான ஹால்டிக்கெட், http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www.trb.tn.nic.in ல் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.