வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: யாத்திரை நிறைவு நிகழ்ச்சிக்கு போதிய பாதுகாப்பு அளிக்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லகார்ஜுனே கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

காங்., எம்.பி ராகுல் விலைவாசி உயர்வை கண்டித்து, கடந்த செப்.,7 ம் தேதி யாத்திரையை துவக்கினார். இதையடுத்து, பல்வேறு மாநிலங்களில் யாத்திரை நடந்தது. தற்போது யாத்திரை காஷ்மீரில் நடந்து வருகிறது.
இந்நிலையில் யாத்திரை காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில், வரும் ஜன.,30ம் தேதி நிறைவடைகிறது. அங்கு ராகுல் தேசிய கொடி ஏற்றி வைக்கிறார். யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க வருமாறு, 21 கட்சிகளின் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில் காஷ்மீரில் நேற்று(ஜன.,28) யாத்திரையில் காங்., எம்.பி ராகுலை பார்க்க ஏராளமானோர் குவிந்த நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் இல்லாததால் பாத யாத்திரை நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, கூட்டத்தினரை கட்டுப்படுத்த வேண்டிய போலீசாரை எங்கும் காணவில்லை. நாங்கள் சுரங்கப்பாதையை கடந்த பிறகு, போலீசார் பாதுகாப்பு சீர்குலைந்தது. எனது பாதுகாப்பு சரியானதாக இல்லை என ராகுல் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், அமித்ஷாவுக்கு கார்கே எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இன்றும், நாளையும் ஆகிய இரண்டு நாட்களில் ஜம்மு காஷ்மீரில் யாத்திரையில் ஒரு பெரிய கூட்டம் சேரும்.

ஜனவரி 30 ஆம் தேதி ஸ்ரீநகரில் விழா நடைபெறும் போதும் அதிகப்படியான கூட்டங்கள் இணையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். நீங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு, அதிகாரிகளுக்கு பாதுக்காப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன், கார்கே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு யாத்திரையில் பாதுகாப்பு குறைவு உள்ளதாக கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து யாத்திரையில் பாதுகாப்பு குறைப்பாடு இல்லை என மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.