இஸ்லாமாபாத்: " அல்லாவே எங்களை காப்பாற்றுவார் " என்றும் அவரே வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்வார் என்றும் பாகிஸ்தான் நிதி அமைச்சர் ஈசாக்தர் நிருபர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது: இம்ரான்கான் தலைமையிலான ஆட்சியில் பல பின்னடைவுகள் ஏற்பட்டன. இவர்கள் செய்த தவற்றால் தற்போது பாதிக்கப்பட்டுள்ளோம். பாகிஸ்தான் மீண்டும் புத்துயிர் பெற்று வளர்ச்சி பாதையில் செல்லும். ஏனேனில் இந்த நாடு இஸ்லாம் பெயரால் அல்லா பெயரால் உருவானது. பிரதமர் ஷெ பாஸ் செரீப் தலைமையில் முன்னேற்ற பாதைக்கு இரவு பகல் பாராது உழைத்து வருகிறோம்.

அல்லாவால் இந்த நாட்டை உருவாக்க முடியுமானால் , இதனை வளர்ச்சி பாதைக்கும் கொண்டு செல்ல அவரால் முடியும் , பாதுகாப்பான பொருளாதாரத்தையும் அவரே காப்பாற்றி மீட்டு தருவார்.
முன்னாள் பிரதமர் நவாஷ்ஷெ ரீப் ஆட்சி காலத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம், பங்கு வர்த்தகம் சீராகவும், சிறப்பாகவும் இருந்தது. இது போன்ற நிலையை மீண்டும் கொண்டு வருவோம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.