அதிமுக, பா.ஜ., திமுக உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களுக்கு அமெரிக்க அரசு அழைப்பு விடுத்துள்ளது. இளம் அரசியல்வாதிகளுக்கான சர்வதேச விசிட்டர் லீடர்ஷிப், எதிர்கால இந்திய ஜனநாயகம் என்ற தலைப்பில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அமெரிக்க கல்வி மற்றும் கலாசார துறை சார்பில் நடத்தப்படுகிறது.
அஇஅதிமுக தகவல் தொழில் நுட்பப்பிரிவின் கோவை மண்டல செயலாளர் சிங்கை ஜி.இராமச்சந்திரன், தமிழக பாஜகவின் மாநில நிர்வாகி எஸ்.ஜி சூர்யா, தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் அலுவலகத்தில் பணியாற்றும் வருண், கர்நாடகா பாஜகவை
சேர்ந்த சம்பத் ராமானுஜம் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2016 ல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அஇஅதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டவர். தற்போது அஇஅதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவில் கோவை மண்டலச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.
இப்பயிற்சியில் அமெரிக்க நாட்டின் அரசியல், அரசியல் அமைப்பு, அமெரிக்க வெளியுறவுக் கொள்கை, அரசாங்க வெளிப்படைத்தன்மை, ஆட்சிமுறை, மக்களாட்சி தத்துவம் உள்ளிட்ட தலைமைப் பண்பிற்கு தேவையான அனைத்தும் கற்றுத்தரப்படும்.