சென்னை: இடைத்தேர்தல் களத்தில் அதிமுக வேகம், விவேகத்தை கண்டிப்பாக காண்பீர்கள் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் இடைத்தேர்தலை சந்திக்கிறோம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் எதிர்காலத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். அதிமுக தனித்தே களம் காண்கிறது. அதிமுகவில் அனைவரும் 99 % ஒருங்கிணைந்தே செயல்படுகிறோம்.
இடைத்தேர்தல் களத்தில் அதிமுக வேகம், விவேகத்தை கண்டிப்பாக காண்பீர்கள். களப்பணியில் அதிமுக ஒரு பொழுதும்
சோர்வடைந்தது இல்லை. அதிமுக வேட்பாளர் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.