வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஸ்ரீ நகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அவந்திபோராவில் நடந்த காங்., பாதயாத்திரையில் காங்., எம்.பி ராகுல் உடன் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹ்பூபா முப்தி இன்று(ஜன.,28) நடைப்பயணம் மேற்கொண்டார்.
காங்., எம்.பி ராகுல் விலைவாசி உயர்வை கண்டித்து, கடந்த செப்.,7 ம் தேதி யாத்திரையை துவக்கினார். இதையடுத்து, பல்வேறு மாநிலங்களில் யாத்திரை நடந்தது. யாத்திரை காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில், வரும் ஜன.,30ம் தேதி யாத்திரை நிறைவடைகிறது.

இந்நிலையில் இன்று(ஜன.,28) ஜம்மு காஷ்மீர் மாநிலம் அவந்திபோராவில் நடந்த காங்., பாதயாத்திரையில், ராகுல் உடன் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹ்பூபா முப்தி இன்று (ஜன.,28) நடைப்பயணம் மேற்கொண்டார். இதில் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
அஞ்சலி

காஷ்மீரில் புல்வாமாவில் பயங்கரவாதிகள் தாக்குதலில் இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்த இடத்தில் ராகுல் மலர் வைத்து மரியாதை செலுத்தினார்.