லக்னோ: இந்தியாவின் தேசிய மதம் சனாதன தர்மம் என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
ராஜஸ்தானின் பின்மாலில் உள்ள மகாதேவ் கோவில் மறுசீரமைப்பு மற்றும் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யோகி ஆதித்யநாத் பேசுகையில், அயோத்தியில் ராமர் கோவில் போன்று நமது வழிபாட்டு தலங்கள் எந்த காலக்கட்டத்தில் இழிவுபடுத்தப்பட்டு இருந்தாலும், அதை மீட்டெடுக்க மக்கள் பிரசாரம் செய்ய வேண்டும்.
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் 500 ஆண்டுகளுக்கு பிறகு பிரம்மாண்ட ராமர் கோவில் கட்டப்படும் அயோத்தியை போன்று, மற்ற கோவில்கள் மீட்டெடுப்பதற்கான பிரசாரம் துவங்கப்பட வேண்டும். தேசிய உணர்வை பிரதிபலிக்கும் வகையில், இந்த பிரம்மாண்ட ராமர் கோவிலை கட்டுவதற்கு பக்தர்கள் அனைவரும் பங்களித்து உள்ளீர்கள். ஒட்டு மொத்த நாட்டு மக்களும் தங்கள் பாரம்பரியத்தை மதிக்கவும் அதை பாதுகாக்கவும் உறுதிமொழி எடுக்க வேண்டும்.

சனாதன தர்மம் இந்தியாவின் தேசிய மதம். அதை ஒவ்வொரு குடிமகனும் மதிக்க வேண்டும். இவ்வாறு யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார்.