தேசியக்கொடி அவமதிப்பு: இரண்டு ஆசிரியர்கள் பணியிட மாற்றம்

Added : ஜன 28, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மாதானம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நலத் துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 25 மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் குடியரசு தினத்தையொட்டி அப்பள்ளியில் தலைமை ஆசிரியரால் தேசியக் கொடியை ஏற்றப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு, இனிப்புகள் வழங்கப்பட்டது. அதன் பின்னர் பள்ளிக்கூடம் மூடப்பட்டு மாணவ மாணவிகள்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மாதானம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நலத் துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 25 மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் குடியரசு தினத்தையொட்டி அப்பள்ளியில் தலைமை ஆசிரியரால் தேசியக் கொடியை ஏற்றப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு, இனிப்புகள் வழங்கப்பட்டது.


அதன் பின்னர் பள்ளிக்கூடம் மூடப்பட்டு மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் வீடு திரும்பியுள்ளனர். ஆனால் ஏற்றப்பட்ட தேசியக்கொடி மாலை 6 மணி இறக்கப்பட வேண்டும் என்ற மரபு இருந்தும் இரவாகியும் தேசியக்கொடி கம்பத்திலிருந்து இறக்கப்படாமல் பறந்தவாறு இருந்தது.


தேசிய கொடியை அவமதித்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பரவியது. இதனையடுத்து பள்ளி தலைமை ஆசிரியை விஜயா மற்றும் இடைநிலை ஆசிரியர் பிரியதர்ஷினி ஆகிய 2 பேரையும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் அம்பிகாபதி வேறு பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

Srinivasan - Chennai ,இந்தியா
28-ஜன-202317:53:45 IST Report Abuse
Srinivasan I went to trade fair in Chennai yesterday. The national flag in war memorial was flying even at 7.30 pm. Whom to blame for this. Will Dinamalar bring this also to the notice if the concerned officials
Rate this:
Cancel
GANESUN - Chennai,இந்தியா
28-ஜன-202317:51:40 IST Report Abuse
GANESUN ரொம்ப நாளா கேட்டுட்டிருந்த இட மாறுதல் கிடைச்சது..
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
28-ஜன-202317:41:33 IST Report Abuse
NicoleThomson கோட்டாவில் வந்திருப்பார்கள் போல , வழக்கம்போல சோம்பி திரிந்துவிட்டனர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X