வேலுார்: ராணிப்பேட்டை மாவட்டம், காரை பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ், 28. லாரி டிரைவர். திருமணமாகி மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், 10 ம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுமியை ஊட்டிக்கு கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதில் சிறுமி மூன்று மாதம் கர்ப்பமானார். புகார்படி ராணிப்பேட்டை மகளிர் போலீசார் சுந்தர்ராஜ்சை போக்சோவில் இன்று(ஜன.,28) கைது செய்து வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிசிகிச்சை பெற்று வருகிறார்.