வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: வந்தே பாரத் ரயிலுக்குள் சிதறிக்கிடந்த குப்பைகளை ரயில்வே ஊழியர் அகற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரதமரின் கனவு திட்டமான வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாநிலங்களுக்கிடையேயான பெருநகரங்களை இணைக்கும் வகையில் துவங்கி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் அவினாஷ் ஷரண் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவேற்றி பகிர்ந்துள்ள படம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதில் வந்தே பாரத் ரயிலுக்குள், காலி தண்ணீர் பாட்டீல்கள், சாப்பிட்டு மிச்சமிருந்த உணவு பொட்டலங்கள், கேரி பைகள், சிதறிகிடப்பதை ஊழியர் சுத்தப்படுத்தும் புகைப்படம் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
![]()
|
ரயில்நிலையங்கள், ரயில் பெட்டிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என பொதுமக்களுக்கும், ரயிலை பயன்படுத்துவோருக்கும் அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில் இது போன்று பொதுமக்கள் பொறுப்பற்ற முறையில் செயல்படுகின்றனர் என பலரும் கண்டனத்தை பதிவு செய்து பகிர்ந்து வருகின்றனர்.முன்னதாக புகைபடத்தில் குறிப்பிட்ட வந்தே பாரத் எங்கிருந்து எந்த மாநிலத்திற்கு இயக்கப்படுகிறது என் விவரம் தெரியவில்லை.