சேலம்:சேலம் மாநகரம், சூரமங்கலம் சரகம், கருப்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சாமி நாயக்கன்பட்டியில் விஜயலட்சுமி என்பவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட கணவரை பிரிந்து மகள் அபிராமி(22) என்பவர் உடன் மேற்படி சொந்த வீட்டில் வசித்து வந்துள்ளார்.கடந்த 25.01.2023 மாலை 17.00 மணிக்கு சென்னையில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
நேற்று காலை 10.30 மணி அளவில் வீட்டு வேலை செய்யும் சித்ரா என்பவர் வீட்டை சுத்தம் செய்துவிட்டு பூட்டி விட்டு சென்றுள்ளார்.இந்நிலையில் இன்று மதியம் கார் ஓட்டுநர் சிவா(32) வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 63 சவரன் தங்க நகைகள் திருடு போயுள்ளதாக தெரிகிறது.வீட்டின் உரிமையாளர் விஜயலட்சுமி என்பவர் சென்னையில் இருந்து வந்து கொண்டுள்ளார்.இவரது மகள் கல்லூரியில் பல் மருத்துவ படிப்பு படித்து வருகிறார்.கருப்பூர் போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்