வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: தேசத்திற்காக என்.சி.சி யின் பங்களிப்பு மகத்தானது என பிரதமர் மோடி பேசினார்.
என்.சி.சி., படையினர் ஏற்பாடு செய்திருந்த 75-ம் ஆண்டு நிகழ்ச்சி டில்லியில் கரியப்பா மைதானத்தில் நடந்தது. அதில், அவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியதுடன், சாகசங்களை செய்து காட்டினர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, என்சிசி படையினரின் திறமைகளை பார்வையிட்டதோடு, அவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.
![]()
|
தொடர்ந்து சிறந்த வீரர்களுக்கு பரிசுகளையும் மோடி வழங்கினார்.
பின்னர் நரேந்திர மோடி பேசியதாவது: என்.சி.சி.உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. நம் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் என்.சி.சி.யின் பங்களிப்பைப் பாராட்டுகிறேன். கடந்த 75 ஆண்டுகளாக என்சிசியை முன்னிலைப்படுத்தியவர்கள், அதில் அங்கம் வகித்தவர்கள், என்சிசி கேடட்களின் உறுதி மற்றும் சேவை மனப்பான்மையால் இந்தியா பெருமிதம் கொள்கிறது..
இநந்தியாவின் பாதுகாப்புத் துறையில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்களால் இன்று இளைஞர்கள் பயனடைந்து வருகின்றனர். கடந்த 8 ஆண்டுகளில், போலீஸ் மற்றும் துணை ராணுவப் படைகளில் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.