புதுடில்லி: பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ரோந்து செல்லும் படைவீரர்களை இரவில் மீண்டும் கோட்டைக்கு அழைப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த 'பீட்டிங் தி ரிட்ரீட்' எனும் நிகழ்ச்சி, சுதந்திரத்துக்குப் பின்பும் தொடர்கிறது.
குடியரசு தினத்தின் 3வது நாள் மாலையில், டில்லியில் உள்ள விஜய் செளக் என்ற பகுதியில் நடத்தப்படுவது வழக்கமாகும். அந்த வகையில், நாளை (ஜன.,29) முப்படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதையடுத்து முப்படைகளின் பேண்ட் குழுவினர், டிரம்செட் முழங்கி, தேசிய கீதம் இசைக்க இந்திய கொடி ஏற்றப்பட்டது. பின்னர், வெவ்வேறு இசைக்குழுக்களின் அணிவகுப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி திரவ்பதி முர்மு , பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
Advertisement