வேலுார்:வேலுார் அருகே, மலையிலிருந்து தள்ளி கொலை செய்யப்பட்ட பெண் சிதம்பரத்தை சேர்ந்தவர் என தெரியந்தது.
வேலுார் மாவட்டம், பாகாயம் அடுத்த பாலமதி மலை பாறையில், இளம் பெண் ஒருவர் பிணம் கிடந்தது. நேற்று பாகாயம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அதில் பெண்ணின் முகம் சிதைக்கப்பட்ட நிலையில், கழுத்தில் தாலி இருந்தது. சுடிதார் அணிந்திருந்தார். மலை உச்சியிலிருந்து தள்ளி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.பாகாயம் போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்ததில், கொலையான பெண் கடலுார் மாவட்டம், சிதம்பரம் அம்மாபேட்டையை சேர்ந்த குணசுந்தரம், சுந்தரி மகள் குணசுந்தரி, 20, என தெரியவந்தது. குணசுந்தரம் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இது குறித்து பாகாயம் போலீசார் இன்று கூறியதாவது: கொலை செய்யப்பட்ட பெண் சிதம்பரத்தை சேர்ந்த குணப்பிரியா, 20. சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
வேலுாரை சேர்ந்த கார்த்தி 22, என்பவருடன் இன்ஸ்ட்ராகிரமில் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இவரது தந்தை ரமேஷ்பாபு வேலுார் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணியாற்றி வந்தார். குணப்பிரியா வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்தாண்டு இருவரும் ஆந்திரா மாநிலம், திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களை இரு வீட்டாரும் சேர்க்கவில்லை. இதனால் வேலுார் ஜீவா நகரில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தார். கார்த்தி மேளம் அடிக்கும் வேலை செய்து வந்தார். இந்நிலையில், குணப்பிரியா ஏழு மாதம் கர்ப்பமானார். சிதரம்பரத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்ற போது அவர்கள் சேர்க்கவில்லை. கர்ப்பத்தை கலைக்கும்படி கார்த்தி கூறினார். இதனால் கணவன் - மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது.
சிதம்பரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு அழுது புலம்பி குணப்பிரியா சென்று விட்டார். கார்த்தி சிதம்பரம் சென்று குணப்பிரியாவை சந்தித்தார். அப்போது முறைப்படி திருமணம் செய்து கொண்டு வாழலாம் என குணப்பிரியா கூறினார்.அதை கார்த்தி ஏற்கவில்லை. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமைடைந்த கார்த்தி குணப்பிரியாவை கொலை செய்ய திட்டமிட்டார்.இதற்காக ஆசை வாரத்தை கூறி, வேலுார் அருகே பாலமதி மலைக்கு அழைத்துச் சென்று கட்டையால் அடித்ததில் குணப்பிரியா இறந்து விட்டார். அவரை மலையிலிருந்து தள்ளி விட்டு தலைமறைவாகி விட்டார். தனிப்படையினர் கார்த்தி கைது செய்யப்பட்டு வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளர். இவ்வாறு அவர்கள் கூறினர்.காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியை கணவரே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Advertisement