கவர்னராகிறார் அமரீந்தர் சிங் மத்திய அரசு அதிரடி திட்டம்

Updated : ஜன 28, 2023 | Added : ஜன 28, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், 80, விரைவில் மஹாராஷ்டிரா அல்லது ஹிமாச்சல பிரதேச மாநில கவர்னராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. விருப்பம்காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த அமரீந்தர் சிங், பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்தவர். சமீபத்தில் அவர் பா.ஜ.,வில் இணைந்தார். இவருக்கு கவர்னர் பதவி வழங்க, பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர்
கவர்னர் அமரீந்தர் சிங் ,அரசு   திட்டம்

பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், 80, விரைவில் மஹாராஷ்டிரா அல்லது ஹிமாச்சல பிரதேச மாநில கவர்னராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.


விருப்பம்



காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த அமரீந்தர் சிங், பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்தவர். சமீபத்தில் அவர் பா.ஜ.,வில் இணைந்தார். இவருக்கு கவர்னர் பதவி வழங்க, பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் திட்டமிட்டுள்ளனர்.


latest tamil news


மஹாராஷ்டிரா கவர்னராக உள்ள பகத்சிங் கோஷ்யாரி, பதவி விலக விருப்பம் தெரிவித்து, பிரதமர் மோடியிடமே முறையிட்டதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதனால், மஹாராஷ்டிரா கவர்னராக அமரீந்தர் சிங் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால், அமரீந்தர் சிங், பஞ்சாபுக்கு அருகில் உள்ள ஏதாவது ஒரு மாநிலத்தின் கவர்னராக பதவி ஏற்க விருப்பம் தெரிவித்துள்ளார். இதனால், காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ஹிமாச்சலுக்கு, அவரை கவர்னராக நியமிக்கும் திட்டமும் உள்ளதாக கூறப்படுகிறது.


குடைச்சல்



இதன் வாயிலாக, ஹிமாச்சலில் காங்கிரஸ் ஆட்சிக்கு அவர் குடைச்சல்கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்குவதற்கு முன்னதாகவே, சில மாநிலங்களின் கவர்னர்களை மாற்ற மத்திய அரசு தரப்பில் திட்டம் உள்ளது. அப்போது, அமரீந்தர் சிங் கவர்னராக நியமிக்கப்படலாம்.

தமிழக கவர்னராக ஆர்.என்.ரவியும், தெலுங்கானா கவர்னராக தமிழிசையும் தொடர்ந்து நீடிப்பர் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

- புதுடில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (3)

29-ஜன-202305:19:14 IST Report Abuse
அப்புசாமி கிழெபோல்ட் இளைஞர்களுக்கு நல் வேலை வாய்ப்பு திட்டம்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
29-ஜன-202305:13:33 IST Report Abuse
J.V. Iyer ஆயுளுக்கும் திரு ஆர்.என்.ரவிதான் தமிழகத்தின் ஆளுநர். பலே சரியான அதிரடித்த்திட்டம்.
Rate this:
Cancel
கண்மணி கன்னியாகுமரி - தமிழ்நாடு,இந்தியா
28-ஜன-202322:47:29 IST Report Abuse
கண்மணி கன்னியாகுமரி இது பாஜகவில் ஆளுநர் பதவிக்கு பஞ்சம் நிலவுவதை காண்பிக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X