பிஎம்டபள்யூ நிறுவனம் மூன்றாம் தலைமுறை பிஎம்டபுள்யூஎக்ஸ்1 (Bmw 3rdGen X1) மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ இந்தியாவில் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களை கொண்ட கார்களை விற்பனை செய்து வருகிறது. அதிலும் இதன் எக்ஸ் சீரிஸ் மாடல்கள் மிகவும் பிரபலமானதாகும். அந்த வரிசையில் எக்ஸ்2 எக்ஸ் 5, எக்ஸ்6, எக்ஸ்7, என ஏராளமான மாடல்கள் விற்பனையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கபட்ட அடுத்த தலைமுறை எக்ஸ்1 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
![]()
|
பிஎம்டபிள்யூஎக்ஸ்1 காரை பொருத்தவரை எஸ்டிரைவ்18ஐ எக்ஸ்லைன் (பெட்ரோல்) (xLine18i and MSport 18d) மற்றும் எஸ்டிரைவ் 18டி எம் ஸ்போர்ட் என மொத்தம் 2 வேரியன்ட்களில் வெளியாகிறது. செயல்திறனை பொறுத்தவரை, எக்ஸ் 1 எஸ்டிரைவ்18ஐ எக்ஸ்லைன் வேரியன்டை பொருத்தவரை 1499 சிசி 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 134 பிஎச்பி பவரை 4400 - 6500 ஆர்பிஎம்மில் வழங்குகிறது. 230 என்எம் டார்க் திறனை 1500-4000 ஆர்பிஎம்மில் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
![]() Advertisement
|
அதேபோல், எஸ்டிரைவ் 18டி எம் ஸ்போர்ட் காரை பொருத்தவரை 2.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு 4 சிலிண்டர் டீசல் இன்ஜினை கொண்டது. இது 147.5 பிஎச்பி பவரையும் 360 எம்என் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் பெட்ரோல் வேரியன்ட் 1500 கிலோ எடையையும், டீசல வேரியன் 1575 கிலோ எடையையும் கொண்டது.
இதில், எக்ஸ் 1 எஸ்டிரைவ்18ஐ எக்ஸ்லைன் வேரியன்ட் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 9.2 நொடியில் பிக்கப் செய்யும். இது அதிகபட்சமாக 208 கி.மீ வேகம் வரை சீறி பாயும். இந்த கார் பெட்ரோல் வேரியன்ட் கார் லிட்டருக்கு 16.3 கி.மீ மைலேஜ் தரும் என ஏஆர்ஏஐ சான்றிழித்துள்ளது. அடுத்ததாக எஸ்டிரைவ் 18டி எம் ஸ்போர்ட் கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 8.9 நொடியில் பிக்கப் செய்யும். இந்த கார் 210 கி.மீ வேகத்தில் சீறிப் பாயும். இந்த காரின் மைலேஜை பொருத்தவரை லிட்டருக்கு 20.37 கி.மீ வரை மைலேஜை வாரி வழங்கும் திறன் கொண்டது.
![]()
|
3ம் தலைமுறை பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காரை பொருத்தவரை பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பெரிய கிட்னி கிரில், முன்பக்கம் ஸ்லீக்கான எல்இடி ஹைட்லைட்கள், முன்பக்க பம்பரில் ஸ்லிக்கான ஏர் இன்டேக் பகுதி சைடு பகுதியிலும் மத்தியில் பெரிய ஏர் இன்டேக் பகுதி என பல்வேறு ஸ்டைலிஷான டிசைன்கள் வழங்கப்பட்டுள்ளன. அதுபோக 18 இன்ச் அலாய் வீல்,பின்பக்கம் ஸ்பாய்லர் பொருத்தப்பட்டுள்ளது.
![]()
|
அதுபோக, கேபின் உள்ளேயும் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. டேஸ் போர்டில் சிங்கள் பேன் கர்வ் கிளாஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 10.25 இன்ச் டிரைவர் டிஸ்பிளே மற்றும் 10.7 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீன் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பிஎம்டபிள்யூ ஐடிரைவ் சிஸ்டத்துடன் ஓஎஸ் 8 இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. முக்கிய சிறப்பம்சமாக, இரண்டு வேரியன்ட்களிலும் ஸ்போர்ட்ஸ் சீட் வழங்கப்பட்டுள்ளது. டீசல் வேரியன்ட்டில் டிரைவர் மற்றும் முன்பக்க பயணிக்கு மட்டும் ஆக்டிவ் சீட் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்க பயணிக்குச் சீட்டில் மசாஜ் செய்யும் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது.
![]()
|
பிஎம்டபிள்யூ எக்ஸ் 1 எஸ்டிரைவ் 18ஐஎக்ஸ் லைன் பெட்ரோல் வேரியன்டை பொருத்தவரை ரூ45.90 லட்சமாகவும், பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்டிரைவ் 18டி எம் ஸ்போர்ட் வேரியன்டை பொருத்தவரை ரூ47.90 லட்சமாகவும் விற்பனைக்கு கிடைக்கும்.