கட்சிகளின் விளம்பர செலவு விபரம் வெளியீடு:! தி.மு.க., ரூ.35 கோடி; அ.தி.மு.க., ரூ.28 கோடி

Updated : ஜன 29, 2023 | Added : ஜன 28, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
அரசியல் கட்சிகளின் 2021 - 22 கால விளம்பர செலவு விபரத்தை, தேர்தல் கமிஷன்வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஆளுங்கட்சியான தி.மு.க., 35.40 கோடி ரூபாய்; பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., 28 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக, தேர்தல் கமிஷன்இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.நாடு முழுதும் உள்ள அரசியல் கட்சிகள், ஒவ்வொரு ஆண்டும் கட்சிகளின் செலவு கணக்கு தணிக்கை அறிக்கையை, தேர்தல் கமிஷனிடம்
Details of advertising expenses of parties...published! DMK, Rs 35 crore; ADMK, Rs.28 crore  கட்சிகளின் விளம்பர செலவு விபரம் வெளியீடு:! தி.மு.க., ரூ.35 கோடி; அ.தி.மு.க., ரூ.28 கோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

அரசியல் கட்சிகளின் 2021 - 22 கால விளம்பர செலவு விபரத்தை, தேர்தல் கமிஷன்வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஆளுங்கட்சியான தி.மு.க., 35.40 கோடி ரூபாய்; பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., 28 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக, தேர்தல் கமிஷன்இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



நாடு முழுதும் உள்ள அரசியல் கட்சிகள், ஒவ்வொரு ஆண்டும் கட்சிகளின் செலவு கணக்கு தணிக்கை அறிக்கையை, தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிக்க வேண்டும்.இந்த அறிக்கையில், அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை, செலவிட்ட தொகை, தற்போது இருப்பு உள்ள தொகை போன்றவை இடம்பெறும்.




வரவு - செலவு


தேர்தல் கமிஷன், அரசியல் கட்சிகள் சமர்ப்பித்த வரவு - செலவு தணிக்கை அறிக்கையை, தன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், பொது மக்கள் பார்வைக்காக வெளியிடும். அந்த வகையில், 2021 - 22ம் ஆண்டுக்கான வரவு - செலவு அறிக்கையை, அரசியல் கட்சிகள் தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பித்து உள்ளன.அவற்றை தேர்தல் கமிஷன் தன் இணையதளத்தில், அங்கீகாரம் பெற்ற தேசிய கட்சிகள், அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகள் என்ற இரு பிரிவுகளில் தனித்தனியாக வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு கட்சியின் ஆண்டு வரவு - செலவு அறிக்கையும், அக்கட்சி பெயரில் தனித்தனியே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், தேசிய மற்றும் மாநிலம் என, 17 கட்சிகளின் ஆண்டு தணிக்கை அறிக்கை முக்கியமானவை. ஆண்டு தணிக்கை அறிக்கை சமர்ப்பித்துள்ள அரசியல் கட்சிகளில், தேசியவாத காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போன்றவை, தேர்தல் விளம்பரத்திற்காக எந்த செலவும் செய்யவில்லை என கூறப்பட்டுள்ளது.




தணிக்கை அறிக்கை


தமிழகத்தில் ஆளுங் கட்சியாக உள்ள தி.மு.க., செலவிட்ட, 35.40 கோடி ரூபாயில், தேர்தலுக்காக மட்டும் 31.54 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்தத் தொகையில், 87 சதவீதம், விளம்பரத்துக்காக மட்டுமே செலவிட்டுள்ளது. தி.மு.க., சார்பில், அச்சு மற்றும் எலக்ட்ரானிக் விளம்பரத்துக்கு, 10.67 கோடி ரூபாய்; கேபிள் மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு, 19.95 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த விபரம் 2021 - 22ம் ஆண்டு தணிக்கை அறிக்கையில் விரிவாக உள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.


latest tamil news


அதே நேரத்தில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., 2021 - 22ம் ஆண்டு, 28.43 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. இதில், 22.47 கோடி ரூபாயை தேர்தல் செலவாக அக்கட்சி கணக்கு காட்டியுள்ளது.இத்தொகையில், 22.28 கோடி ரூபாய் விளம்பரத்துக்காகவும், 18.47 லட்சம் ரூபாய் நட்சத்திர வேட்பாளர்கள் போக்குவரத்துக்காகவும் செலவு செய்துள்ளதாக அக்கட்சி கூறியுள்ளது.- நமது டில்லி நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

29-ஜன-202317:08:45 IST Report Abuse
அப்புசாமி பா.ஜ, காங்கிரஸ் எதுவும் செலவே செய்யலியாக்கும்?
Rate this:
Cancel
29-ஜன-202315:23:04 IST Report Abuse
ஆரூர் ரங் 25 கோடி சேராதுதானே?.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
29-ஜன-202307:10:56 IST Report Abuse
Mani . V என்ன எழவோ, இதெல்லாம் உண்மையுன்னு நம்பி தொலையணும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X