வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அனுமதி இல்லாமல் அவரது பெயர், புகைப்படம், குரல் போன்றவற்றை பயன்படுத்துவோர் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரஜினி வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
![]()
|
ரஜினிகாந்த் சார்பாக அவரது வழக்கறிஞர் இளம் பாரதி வெளியிட்டுள்ள பொது அறிவிப்பில் கூறியுள்ளதாவது,‛ எனது கட்சிக் காரர் ரஜினிகாந்த் இந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகராக உள்ளார். பல்வேறு மொழிகளில் நடித்துள்ள இவரை உலகமெங்கும் உள்ள ரசிகர்கள் ‛சூப்பர் ஸ்டார் 'என்று அழைக்கின்றனர். திரைத்துறையில் தனக்கென்று ஈடு இணையில்லாத இடத்தை பிடித்துள்ளார்.
![]()
|
இந்நிலையில் பல்வேறு உற்பத்தி நிறுவனங்கள், இணையதளங்கள் மற்றும் பல நிறுவனங்கள், விளம்பரத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் பெயர், புகைப்படம், கார்ட்டூன் படம், குரல் போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றன. இது பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
இதனால் ரஜினிகாந்தின் பெயர், புகைப்படம், குரல், கார்ட்டூன் படம் போன்றவற்றை ஒப்புதல் இல்லாமல் வணிகரீதியாக பயன்படுத்துவோர் மீது உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்' இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement