திருவள்ளூர்,-திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பாண்டு அரவைப் பருவத்திற்கு 22.50 கோடி கிலோ கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுவரை, 7.60 கோடி கிலோ கரும்பு கொள்முதல் செய்து அரவை முடிக்கப்பட்டு உள்ளது.
மாவட்ட நிர்வாகத்தின் தொடர் முயற்சியின் காரணமாக, கரும்பு கிரையத் தொகை 10.14 கோடி ரூபாய் இதுவரை இல்லாத அளவிற்கு உடனுக்குடன் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது.
ஆலையின் தினசரி சர்க்கரை கட்டுமானம் கடந்த ஆண்டை விட இவ்வாண்டு 1.10 சதவீதம் கூடுதலாக பெறப்பட்டு, 9.02 சதவீதம் அளவில் பெறப்பட்டு உள்ளது.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, நான்கு கரும்பு அறுவடை இயந்திரங்கள் இயக்கப்பட்டு இதுவரை 20 லட்சம் கிலோ கரும்பு அறுவடை செய்யப்பட்டு உள்ளது.
இனிவரும் காலங்களில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை அணுகி, கரும்பு அறுவடை இயந்திரம் வாயிலாக, தங்களுடைய கரும்பினை அறுவடை செய்து ஆலை அரவைக்கு தாமதம் இன்றி அனுப்புமாறு, திருவள்ளூர் கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.