ஸ்ரீவில்லிபுத்தூர்,--ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் ஒப்பந்தக்காரர்கள் நல சங்கத்தின் கூட்டம் மூத்த உறுப்பினர்கள் தேசியப்பன், குருசாமி தலைமையில் நடந்தது.
இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவராக கற்பகவேல், செயலாளராக மணிகண்டன், பொருளாளராக சடையப்பன், துணைத் தலைவராக ஸ்ரீ குமரன் ஜீவா, துணைச் செயலாளர் வெங்கடேசன், பொருளாளராக கண்ணன், நிர்வாக குழு உறுப்பினர்களாக பரமன், முத்துராமகிருஷ்ணன், நோபில் நவஜீவன், ஜின்னா, பாபு, அழகராஜ், பெருமாள் ஜெய கண்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.