கோவை:இந்துஸ்தான் கல்வியியல் கல்லுாரியில், 'அலைபேசி பயன்பாடும்; அதன் ஆபத்துக்கள்' என்ற கருவை மையமாக கொண்டு, விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் செயலர் சரஸ்வதி, முதல்வர் குட்டியம்மாள் பேரணியை துவக்கி வைத்தனர்.
இதில், மாணவர்கள் பதாகைகளை ஏந்தி, அலைபேசிக்கு அடிமையாவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து கோஷமிட்டு சென்றனர். பேரணி கல்லுாரி நுழைவாயில் முதல் புலியகுளம் முத்துமாரியம்மன் கோவில் வரை சென்று முடிந்தது. மாணவர்கள் கோவிலை துாய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
பேரணியில் கல்லுாரி மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.