சிவகாசி,-சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லுாரி ஆங்கிலத்துறை திரைப்பட விமர்சன அமைப்பு, முதுகலை தமிழாய்வுத் துறை சார்பில் புழுதி காட்டு வேலிகள் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
கல்லுாரி முதல்வர் பழனீஸ்வரி தலைமை வகித்தார். ஆங்கிலத்துறை தலைவர் ஷோபனா தேவி வரவேற்றார். திரைப்பட இயக்குனர் கஸ்துாரிராஜா பேசினார். அவர் பேசுகையில், பெண் என்பவள், உயிரூட்டி உணர்வூட்டி அரவணைத்து செல்லும் பெரும் கொடையானவள்.
பெண்கள் விழிப்புணர்வோடு செயல்பட்டு முன்னேற வேண்டும் என்றார். தமிழ்த்துறை தலைவர் பொன்னி நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை கல்லுாரி சினிமா விமர்சன குழு உறுப்பினர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், தமிழ் துறை, ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் செய்தனர்.