கோவை:யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி சார்பில், வீடு மற்றும் கார் கடன் கண்காட்சி, பீளமேடு, சுகுணா திருமண மண்டபத்தில் நடந்தது.
கோவை போலீஷ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கண்காட்சியை துவக்கி வைத்தார்.
கண்காட்சியில், பரிசீலனை கட்டணம் இல்லாமல் பலருக்கு, உடனடியாக வங்கி கடன் வழங்கப்பட்டது.
யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியின், துணை பொது மேலாளர் மற்றும் மண்டல தலைவர் ரெஞ்சித் சுவாமிநாதன், ஆருத்ராஸ் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மணி, ஆர்.வி.எஸ்.கல்வி குழுமங்களின் தலைவர் குப்புசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.