கோவை:2022-23ம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையிலான காலத்தில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிட வரி உள்ளிட்ட வரியினங்களின் நிலுவை தொகை செலுத்த ஏதுவாக இன்று சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடக்கின்றன.
அதன்படி, கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட, ஒண்டிப்புதுார் மற்றும் நேரு நகர் மாநகராட்சி பள்ளிகள், மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட, 34வது வார்டு கவுண்டம்பாளையம், மஞ்ஜீஸ்வரி காலனிகற்பக விநாயகர் கோவில் வளாகம், 38வது வார்டு வடவள்ளி பாலாஜி நகர், புவனேஸ்வரி அம்மன் கோவில் வளாகத்திலும் முகாம் நடக்கிறது.
வரும், 29ம் தேதி, 73வது வார்டு பொன்னையராஜபுரம் வார்டு அலுவலகம், 40வது வார்டு பெரிய தோட்டம் காலனி பகுதிகளிலும், இன்று, 40வது வார்டு வி.என்.ஆர்., நகரிலும் முகாம் நடக்கிறது.
தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட, 98வது வார்டு சாய் நகர், காந்தி நகர், 97வது வார்டு ஹவுசிங் யூனிட்-2, பிள்ளையார்புரம் பகுதியிலும் இடம்பெறுகிறது.
வடக்கு மண்டலம், 11வது வார்டு ஜனதா நகர் மாநகராட்சி பள்ளி, 15வது வார்டு சுப்ரமணியம்பாளையம் மாநகராட்சி வணிக வளாகம், மத்திய மண்டலம், 32வது வார்டு சிறுவர் பூங்கா, ரத்தினபுரி, 63வது வார்டு ஒலம்பஸ், 80 அடி ரோட்டில் உள்ள வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களிலும் முகாம் நடப்பதால், பொது மக்கள் இதனை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளுமாறு, மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.