விருதுநகர்,--விற்பனை குழு செயலாளர் வேலுச்சாமி கூறியதாவது: விற்பனை குழுவில் விருதுநகர், ராஜபாளையம், சாத்துார், அருப்புக்கோட்டை, வத்திராயிருப்பு, வெம்பக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்துார் ஆகியவை 7 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.
விருதுநகர், ராஜபாளையம், சாத்துார், அருப்புக்கோட்டை கூடங்களில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு உலர்களங்கள், பரிவர்த்தனை கூடங்கள், ஏல கொட்டகைகள், சேமிப்பு கோடவுன்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
விருதுநகர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 4 ஆயிரம் மெ. டன் கொள்ளளவு கொண்ட 3 சேமிப்பு கோடவுன்கள், சாத்துாரில் 36,000 மெ.டன் கொள்ளளவு கொண்ட 6 சேமிப்பு கோடவுன்கள், அருப்புக்கோட்டையில் 4600 மெ.டன் கொள்ளளவு கொண்ட 4 சேமிப்பு கோடவுன்கள், மொத்தம் 1,8 6,000 மெ.டன் கொள்ளவு கொண்ட 17 கோடவுன்கள் உள்ளன.விவசாயிகள் விளைபொருளை குவிண்டாலுக்கு நாளொன்றுக்கு 10 பைசா வீதம், வியாபாரிகள் குவிண்டாலுக்கு நாளொன்றுக்கு 20 பைசா வீதமும் குறைந்த வாடகையில் 6 மாதங்கள் வரை இருப்பு வைத்து நல்ல விலை ஏற்றம் வரும் போது விற்பனை செய்து பயன்பெறலாம், என்றார்.