கோவை:தமிழ்நாடு வேளாண் பல்கலை வணிகமுறையில் காய்கறி மற்றும் பழப்பொருட்கள் தயாரித்தல் பயிற்சி, ஜன.,31, பிப்.,1 ஆகிய இரண்டு நாட்கள் அளிக்கப்படவுள்ளது.
பயிற்சியில், உலரவைக்கப்பட்ட காய்கறி, பழங்கள், பழ ஜாம், பழரசம், தயார்நிலை பானம், ஊறுகாய், ஊறுகனி, பழமிட்டாய் ஆகியவை தயாரிப்பு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலை, 9:30 முதல் மாலை, 5:00 மணி வரை அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் நடக்கும்.
ஆர்வமுள்ளவர்கள், 1,770 ரூபாய் கட்டணமாக பயிற்சியின் முதல் நாளன்று செலுத்த வேண்டும். விபரங்களுக்கு, 94885-18268/0422-6611268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.