பெ.நா.பாளையம்:தடாகம் போலீஸ் எல்லைக்குட்பட்ட சின்னதடாகம் பகுதியில் போலீசார் வசந்தகுமார், கார்த்திக் ஆகியோர் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, ஒரு நபர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். போலீசாரை பார்த்தவுடன் சைக்கிளை கீழே போட்டுவிட்டு, தப்பி ஓட முயற்சித்தார்.
போலீசார், அவரை விரட்டி பிடித்து, விசாரித்தனர். அதில், அவர் மொபைல் போனை திருடிவிட்டு தப்பிக்க முயன்றது தெரியவந்தது.
விசாரணையில், அவர் பல்வேறு திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய தேனியை சேர்ந்த விஜயகுமார்,35, என தெரியவந்தது.
போலீசார் அந்த நபரை கைது செய்து, அவரிடமிருந்து, 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 3 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.
மொபைல் போன் திருடனை விரட்டி பிடித்த போலீசாருக்கு, கோவை எஸ்.பி., பத்ரி நாராயணன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.