கோவை:ஈரோடு மாவட்டம், பழையபாளையத்தை சேர்ந்தவர் விக்னேஷ்வரன், கோவை புரூக்பாண்ட் ரோட்டிலுள்ள மாலில் வேலை செய்து வந்தார்.
26ம் தேதி, வேலைக்கு நடந்து சென்ற போது, பைக்கில் வந்த இரு ஆசாமிகள், மொபைல் போனை பறித்து தப்பினர். விக்னேஸ்வரன் உடனடியாக தனது நண்பர்களுக்கு தெரிவித்தார்.
அவர்களுடன் சேர்ந்து, மொபைல் போன் பறித்த ஆசாமிகளை பைக்கில் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். அவர்களை போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரிக்கையில் அவர்கள் சாய்பாபாகாலனி, சேர்மன் ராஜ் நகரை சேர்ந்த வசந்தகுமார், ரத்தினபுரி ஓசிம் நகரை சேர்ந்த துரைசாமி ஆகியோர், என தெரிந்தது. இருவரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.