கோவை:ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் முன்னாள் மாணவர் சங்கம், புதுமைகள் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் சார்பில், 'முன்னாள் மாணவர் நேருக்கு நேர் சந்திப்பு' நிகழ்ச்சி நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
முன்னாள் மாணவர் மற்றும் ஆஸ்திரேலியா ஜெ.எம்.எம்., கன்சல்டன்ட் நிறுவனர் முரளி மனோகர் பேசுகையில்,'' தொழில்வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள, கல்லுாரியில் இருந்தே மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ளவேண்டும். வேலைவாய்ப்புக்கு ஆங்கில புலமை தற்போது அவசியமாகியுள்ளது. தாய்மொழியிலும் சிறந்து விளங்கவேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து, பி.பி.ஏ., சி.ஏ., இரண்டாமாண்டு மாணவி ரூத் இவாஞ்சலின் இளம் தொழில்முனைவோராக அறிவிக்கப்பட்டு, விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். முன்னாள் மாணவர் சங்க தலைவர் பிரபு, பொருளாளர் ஷோபனா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.