தளவாய்புரம்,-தளவாய்புரம் அருகே புனல் வேலி வெங்கடாஜலபதி கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.
முதல் நாள் விக்னேஸ்வர பூஜை, ரொம்ப கலச ஆவாஹனம், சாற்று முறை பிரசாத தொடர்ந்து இரண்டாவது நாள் கோ பூஜை, யாக சாலை நித்திய ஹோமங்கள், தீபாராதனை தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியாக விநாயகர் பூமி நீளாதேவி, ெவங்கடேஸ்வர பெருமாள், பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அலங்காரம் திருவாராதனம், லட்சார்ச்சனை நடந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
ராஜபாளையம் தளவாய்புரம் புனல் வேலி சுற்றுவட்டார பகுதி பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை புனல் வேலி வெங்கடாசலபதி கோயில் டிரஸ்ட் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.