கோவை:கே.எம்.சி.எச்., மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் சிவகுமாரனுக்கு, மருத்துவ தொலைநோக்கு தலைமை விருது வழங்கப்பட்டுள்ளது.
பினான்ஸ் எக்ஸ்பிரஸ், மருத்துவத்துறையின் சிறந்த தலைமைப்பண்பு, புதுமைகள் புகுத்தல், மருத்துவத் துறை முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
கே.எம்.சி.எச்., மருத்துவமனை முதன்மை செயல் அதிகாரி டாக்டர் சிவகுமாரனுக்கு, மருத்துவ தொலைநோக்கு தலைமை விருது வழங்கப்பட்டுள்ளது. மருத்துவத் துறையில், இன்வென்டரி மற்றும் செயல்பாட்டுத் திறனில் சிறந்து விளங்கியமைக்காக, இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதுமுள்ள முன்னணி மருத்துவமனைகளை சேர்ந்த முதன்மை செயல் அதிகாரிகள் மற்றும் முதன்மை நிதி அதிகாரிகள் 500 பேர் அடங்கிய பட்டியலில் இருந்து, 50 பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
கே.எம்.சி.எச்., தலைவர் நல்ல ஜி பழனிச்சாமி பேசுகையில், ''டாக்டர் சிவகுமாரன் கடின உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் இந்த விருது ஒரு சான்றாகும்,'' என்றார்.