விருதுநகர்,--விருதுநகர் நோபிள் பள்ளியில் 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு 74 நிமிடங்கள் தொடர்ச்சியாக ஸ்கேட்டிங் செய்து 74 மாணவர்கள் நோவா உலக சாதனை படைத்தனர்.
போட்டியை நோபிள் பள்ளி நிர்வாகி ஜெரால்டு ஞானரத்தினம், முதல்வர் வெர்ஜின் இனிகோ துவக்கி வைத்தனர். இந்தியன் நோவா ரெக்கார்ட்ஸ் இயக்குனர் திலீபன், ஜெயக்குமார் நடுவராக செயல்பட்டனர்.
இதில் விருதுநகர் நோவா பள்ளி, அருப்புக்கோட்டை மினர்வா மெட்ரிக் பள்ளி, சிவகாசி காமராஜர், கம்மவார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், ராஜபாளையம் உள்ளிட்ட பள்ளிகளில் இருந்து 74 மாணவர்கள் 6 மாதமாக பயிற்சி செய்து உலக சாதனையை நிகழ்த்தினர்.
ஏற்பாடுகளை யுகம் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிர்வாகி அருண்ராஜ் செய்தார். மாணவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.