சிவகாசி,- -சிவகாசி சித்துராஜபுரம் தேவி நகரில் நான்கு வீடுகளில் திருட்டு நடந்ததை தொடர்ந்து சீனிவாச பெருமாள் எஸ்.பி., நேரில் விசாரணை செய்தார்.
சிவகாசி சித்துராஜபுரம் தேவி நகரை சேர்ந்த பத்மநாபன் 67, குடும்பத்துடன் திருப்பதி சென்றார். இவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் ரூ. ஒரு லட்சம், ஒரு கிலோ வெள்ளி, 60 பவுன் தங்க நகையை திருடியதாக போலீசார், விசாரித்த நிலையில் வீட்டில் 90 பவுன் நகை திருடு போனது தெரிய வந்தது.
மேலும் அருகருகே உள்ள மூன்று வீடுகளில் திருட்டு நடந்தது. இப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் டூவீலரில் வந்த இரு நபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இந்நிலையில் சீனிவாச பெருமாள் எஸ்.பி., திருட்டு நடந்த வீடுகளில் நேரில் விசாரணை செய்தார். திருட்டில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்காக 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
Advertisement