அன்னூர்:அன்னூர் குளத்தின் மேற்கு பகுதியில், ஒட்டர்பாளையம் ஊராட்சி மற்றும் அன்னூர் பேரூராட்சியில் இருந்து குப்பை டன் கணக்கில் கொட்டப்படுகிறது. இந்த குப்பையில் நேற்று மதியம் திடீரென தீ பிடித்தது.
தீ அருகில் இருந்த திருமூர்த்தி என்பவர் கரும்புத் தோட்டத்திற்கும் பரவியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கரும்புகள் எரிந்து கருகின. அன்னூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
அப்பகுதி மக்கள் கூறுகையில், 'சமூக விரோதிகள் இங்கு குப்பைக்கு தீ வைத்து விடுகின்றனர், இதனால் இப்பகுதி மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. குளத்தில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும். தீ வைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
Advertisement