கோவை:சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமி மற்றும் யங் இந்தியன்ஸ் சார்பில், 'ஒரு நாள் - கலெக்டர், போலீஸ், மாநகராட்சி கமிஷனர்' எனும் தனித்துவமான போட்டியை கோவை விழா, 15வது பதிப்பின் போது துவங்கப்பட்டது.
இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் கோவை கலெக்டர், போலீஸ் கமிஷனர், மாநகராட்சி கமிஷனர்களுடன் ஒரு நாள் பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமியில், 100 சதவீத உதவித்தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
மாணவி ரக் ஷிதா ஒரு நாள் மாநகராட்சி கமிஷனராகவும், ராஜேஸ்வரி போலீஸ் கமிஷனராகவும், அனுவர்ஷினி மாவட்ட கலெக்டராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், கலெக்டர் சமீரன், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், கோவை சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமி தலைவர் அருண், தலைமை நிர்வாக அதிகாரி யாஸ்மின், யங் இந்தியன்ஸ் அமைப்பின் உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
Advertisement