கோவை:கோவையில் இயங்கும் தனியார் பஸ்களின் தொழில் போட்டி காரணமாக, இரண்டு பஸ்களும் உரசிசென்றது பயணிகளை பதை பதைக்க வைத்தது.
கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து காந்திபுரம், உக்கடம், கோவைபுதூர் வழியாக இயங்கும் தனியார் பஸ் ஒன்றும், சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து காந்திபுரம் வழியாக கணுவாய் செல்லும்.
இந்த பஸ்சும், மற்றொரு தனியார் பஸ்சும், யார் முந்தி முதலில் செல்வது என்ற தொழில் போட்டி காரணமாக, நேற்று கோவை பீளமேடு பகுதியில் தகராறில் ஈடுபட்டனர். இரு பஸ்களும் ஒன்றை ஒன்று உரசி சென்றது, பயணிகளையும் வாகன ஓட்டிகளையும் பதை பதைக்க வைத்தது.
பீளமேடு பகுதியில், போக்குவரத்து சரிசெய்யும் பணி மேற்கொண்டிருந்த பெண் போலீசார், இரண்டு பஸ்களையும் தடுத்து நிறுத்தினர். கண்டக்டர் மற்றும் டிரைவர்களிடம் விசாரணை மேற்கொண்டு, இரு பஸ்களையும் சில மணி நேரம் சாலையோரம் நிறுத்தி வைத்து, எச்சரித்து அனுப்பினர்.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:
உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும், சாலையில் செல்லும் போது மக்களை அச்சுறுத்தும் வகையில் பஸ்களை இயக்கும், இதுபோன்ற தனியார் பஸ்களின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.
அந்த டிரைவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது, பிற ஓட்டுனர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Advertisement