கோவை:கோவை தொழில்நுட்ப கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், சமூகத்திற்கான அறிவியல் என்ற தலைப்பில், அறிவியல் கண்காட்சி கோவை தொழில்நுட்ப கல்லுாரியில் நேற்று நடந்தது.
நான்கு மாவட்டங்களை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மரபு சாரா கல்லுாரி முதல்வர் ராஜேஸ்வரி தலைமையிலான குழு, படைப்புகளை மதிப்பீடு செய்து வெற்றியாளர்களை தேர்வு செய்தனர்.
வெற்றியாளர்களுக்கு, லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் வழக்கறிஞர் ஜெயசேகரன் மற்றும் முத்தழகு ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
கண்காட்சி ஏற்பாடுகளை, கோவை தொழில் நுட்பக் கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.