ஆர்.எஸ்.மங்கலம்,-தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சேதமடைந்த பள்ளி வகுப்பறை கட்டங்களுக்கு பதில் புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் கலங்காப்புலி, அளிந்திக்கோட்டை, ஊரணங்குடி பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் பள்ளி கட்டடங்கள் சேதம் அடைந்திருந்ததால் மழைக்காலங்களில் மாணவர்கள் ஆபத்தான கட்டடத்தில் இட நெருக்கடியில் படித்தனர்.
எனவே, பழைய கட்டடங்களை அகற்றிவிட்டு இந்த பள்ளிகளில் வகுப்பறைக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும், என தினமலர் நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தது. இதன் எதிரொலியாக பள்ளியில் சேதமடைந்த கட்டடங்கள்இடிக்கப்பட்டு புதிய கட்டடம் கட்டுவதற்கு யூனியன் தலைவர் ராதிகா தலா ரூ.28 லட்சம் நிதி ஒதுக்கினார்.
இந்த நிலையில் 3 பள்ளிகளிலும் புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் யூனியன் தலைவர் ராதிகா அடிக்கல் நாட்டி கட்டடப் பணிகளை துவக்கி வைத்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் மலைராஜ் உட்பட யூனியன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Advertisement