ராமநாதபுரம்,--பனை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் ரேஷனில் கருப்பட்டி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ரேஷனில் சீனிக்கு பதில் கருப்பட்டி வழங்கப்படும் என்று சட்டசபையில் 2022ல் பட்ஜெட்டில் அறிவித்தனர்.
அத்திட்டத்தை இதுவரை செயல்படுத்தாமல் இருப்பதை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் தனபாலன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன் வரவேற்றார்.
மாநில துணை தலைவர் லோகநாதன், துணை பொது செயலாளர் வெற்றி ராஜன், வர்த்தக அணி தலைவர் ரமேஷ்குமார், மாநில அவைத்தலைவர் அற்புதம், மாநில பொருளாளர் பிரபாகரன், துணைத்தலைவர் அன்புகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
நாடார் சங்க நிர்வாகிகள், நாடார் பேரவை உறுப்பினர்கள் மற்றும் பனைத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். மாவட்ட செயலாளர் காசி விஸ்வநாதன் நன்றி கூறினார்.