திருப்பூர்:திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ., செயலாளர் ராஜா, திருப்பூர் எஸ்.பி.,யிடம் அளித்த மனு விவரம்:
திருப்பூர் மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்ட காங்கயம், வெள்ளகோவில், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை பார்களில் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மது விற்பனை நடக்கிறது.
இது குறித்து மதுக்கடைகள் எண்களை குறிப்பிட்டு, உள்ளூர் போலீஸ் ஸ்டேஷன்கள், மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாரிடம் நேரிலும், தொலை பேசியிலும் தொடர்பு கொண்டு பல முறை புகார் அளிக்கப்பட்டது.இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
வழக்கம் போல் இந்த சட்ட விரோத செயல் நடைபெறுகிறது. இப்பிரச்னையில் எஸ்.பி., நேரடியாக ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.