முதுகுளத்துார்,---முதுகுளத்தூரில் நேதாஜி கல்வி அறக்கட்டளை சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 126வது பிறந்த நாளை முன்னிட்டு வடமாடு மஞ்சு விரட்டு போட்டி நடந்தது.
பல மாவட்டங்களில் இருந்து 15 காளைகள் கலந்து கொண்டன. காளைக்கு 9 வீரர்கள் களம் இறக்கப்பட்டு 25 நிமிடம் ஒதுக்கப்பட்டது. வெற்றி பெற்ற காளைகள், வீரர்களுக்கு குத்து விளக்கு, பாத்திரம், ரொக்கம் வழங்கப்பட்டது.
போட்டியை எம்.பி., தர்மர் துவக்கி வைத்தார். மாலை நடந்த பரிசளிப்பு விழாவில் அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.